விசாக்கள் காலாவதியான நிலையில் கொழும்பில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் இலங்கை குடிவரவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவியல் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினர், கொழும்பு, ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் சோதனை நடத்தியபோதே, அங்கு வேலை செய்த குறித்த இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 17 பேர் சுற்றுலா விசாவில் மூன்று மாதங்களுக்கு முன் இலங்கைக்கு வந்ததாகவும் 4 பேர் குடியிருப்பு விசாவில் வந்திருந்ததாகவும் , ஒருவர் வணிக விசாவில் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிய வருகிறது.
இந்நிலையில் கைதானவர்களை வெலிசரயிலுள்ள தற்காலிக அடைப்புக் கூடத்தில் வைத்திருப்பதாகவும், அவர்களை விரைவில் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குடிவரவியல் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply