, ,

ஈஸ்டர் ஞயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது-பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

Spread the love

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் தொடர்புபட்டுள்ள விடயங்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப்  பொது  பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்த   நிலையில், தற்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடனும்  தொடர்பிருப்பதாகப் பொதுப்  பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

சில தினங்களுக்கு முன்  குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு   ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடனும்   தொடர்புள்ளதாகக்  கணிசமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுகுறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், எந்தவொரு குற்றத்தையும் மறை ப்பதற்கோ
குற்றவாளிகள்  சுதந்திரமாக நடமாடவோ நாங்கள் ஒருபோதும்  அனுமதிக்க மாட்டோமென்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை தொடர்பில் ஜந்து வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிள்ளையான், கோத்தபாய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதேசமயம்  இலங்கைப் புலனாய்வுக்  கட்டமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றியபோது நடத்தப்பட்ட கொலைகள் மற்றும்  கைதுகள் மீதான குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் குழுவினர்  மீது சுமத்தப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page