,

லஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருமாறு ரணிலுக்கு அழைப்பாணை

Spread the love

ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு  சமூகமளிக்குமாறு  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து அவர் அளித்த வாக்குமூலம் குறித்து விசாரிப்பதற்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சாமர சம்பத் தசநாயக்க  2016 ஆம் ஆண்டில் ஊவா  மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய போது, பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வாங்கவென  வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாய்  காசோலை பெற்று அதனை சொந்த தேவைக்காக பயன்படுத்திய ஊழல் தொடர்பில்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த  வியாழக்கிழமை (10.04) சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, அவர் வௌியிட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களுடன், ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு
அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page