கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் நேற்றைய தினம் (09.04)அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் பிள்ளையான் நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.










Leave a Reply