மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை மில்க் போர்ட் வீதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இன்றைய தினம் (09.04) புதன்கிழமை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மரணத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில், வாழைச்சேனைப் பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.










Leave a Reply