சீதுவ வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

Spread the love

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதி லியகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று(08.04)செவ்வாய்க்கிழமை  காலை  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜூக்கி உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் குறித்த  வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர்  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த  துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 51 வயதான நபர், நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன்  பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிதாரியைக்   கைது செய்வதற்கான விசாரணைகள்  சீதுவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page