,

யாழில் கடலுக்குள் பாய்ந்த வாகனம் அதிகாலையில் நடந்த சம்பவம்

Spread the love

யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வாகனம் ஒன்று பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இன்று (03.06) செவ்வாய் காலை காரைநகரில் இருந்து மிருசுவில் நோக்கி பயணித்த வான்(Van) ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்த நிலையில் பொன்னாலை பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது.

குறித்த விபத்தில் வாகனம் பாரிய அளவில் சேதத்துக்குள்ளாகிய போதிலும் வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page