, ,

அண்மையில் வாகன விபத்தில் பலியான யாழ், இந்தியத் துணைத்தூதரக அதிகாரியின் மகனும் பலி

Spread the love

அண்மையில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான யாழ், இந்தியத் துணைத் தூதரக உத்தியோகத்தரின் மகனும் உயிரிழந்தார்.

யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராகப் பணிபுரிந்து வந்த சச்சிதானந்த குருக்கள் பிரபாகர சர்மா, அண்மையில் ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில்,அவரது மகனான அக்க்ஷய் மற்றும் மனைவி சீதாலட்சுமி(யாழ்,பல்கலைக்கழக விரிவுரையாளர்)
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி அக்க்ஷய் நேற்று (01.06) உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த மரணங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page