அம்பாறை பெரிய நீலாவணைப் பகுதியில் இன்றைய தினம் (30.05) வெள்ளிக்கிழமை வெட்டுக்காயங்களுடன் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்த குடும்பப்பெண்ணின் கணவர், தொழில் நிமித்தம் வெளிநாடொன்றில் தங்கியுள்ளதாகவும், கொலை இடம்பெற்ற போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த, சிசிடிவி காணொளி கொலையாளியினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை தொடர்பில் பெரிய நீலாவணைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











Leave a Reply