நடிகர் ராஜேஷ் காலமானார். திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் நேற்றைய தினம்(29.05) வியாழக்கிழமை காலமானார்.
அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.அத்துடன், மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ள அவர், வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார்.
இவ்வாறு 45 வருடங்களாக சினிமாவில் பயணித்து வந்த நடிகர் ராஜேஷ் நேற்றைய தினம் தனது 75 ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராஜேஷின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.










Leave a Reply