உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்றைய தினம் (28.05) புதன்கிழமை மாலை தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் இடம் பெற்றது.
ஊரின் மறுமலர்ச்சியை நோக்கி எனும் தொனிப்பொருளில் மன்னார் நகரசபை,பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை,முசலி பிரதேச சபை ஆகிய 5 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க முன்னிலையில், நேற்றையதினம் பதவியேற்றுக் கொண்டதுடன் சத்திய பிரமாணமும் செய்து கொண்டனர்.
இதன்போது, மன்னார் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட 11 நபர்கள் நேரடியாக வட்டார ரீதியாக வெற்றி பெற்று உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் 8 உறுப்பினர்கள் போனஸ் ஆசனம் மூலம் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.
குறித்த சத்திய பிரமாண நிகழ்வில் பிரதியமைச்சர் உட்பட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்,தேசிய மக்கள் சக்தியின் கட்சியின் உறுப்பினர்கள்,வேட்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


















Leave a Reply