,

மன்னாரில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “கிளீன் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சி திட்டம்

Spread the love

மன்னார் உயிலங்குளம் 542 படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

542 ஆவது படைப் பிரிவு அதிகாரி  மேஜர் விக்டர் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற
குறித்த நிகழ்வில்  கலந்து கொண்ட பொதுமக்களுக்கு  கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் குறித்த விரிவுரை நிகழ்த்தப்பட்ட நிலையில்,

பொது மக்கள் ஆர்வத்துடன் இராணுவத்தினருடன் இணைந்து கால்வாய் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

குறித்த சுத்திகரிப்பு பணியானது, கட்டுக்கரை குளத்தில் இருந்து இலுப்பை குளம்  மாதோட்டம் மற்றும் மக்களின் வயல் நிலங்களுக்கு செல்லுகின்ற கால்வாயிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது, மன்னார்,பிரதேச சபைக்கு சொந்தமான   ஜே.சி.பி மற்றும் உழவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

மேலும் இந்த சுத்திகரிப்பு பணியில் திணைக்கள அதிகாரிகள் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கு பற்றியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page