கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்டன் தேயிலைத் தோட்ட வீதியில் லொறியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (25.) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படு காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,விபத்து நடந்த இடத்தில் நொறியை விட்டு சாரதி தப்பிச்சென்றுள்ள நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் கொத்மலை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.










Leave a Reply