அச்சங்குளம் கடற்கரைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (22.05)வியாழக்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகளில், சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை அருகே அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் நேற்று வியாழன் (22) காலை 10.மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டதன் பின்னர்
மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதன் பின், சடலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த கடற்படை சிப்பாய் 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வருகிறது.
குறித்த கடற்படை சிப்பாய் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாம்களில் பணியாற்றி வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.













Leave a Reply