வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி இலஞ்சம் கோரியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டிற்கு அமைவாக,
பூவரசங்குளம்
பொலிஸ்
நிலையத்திற்கு வருகை தந்திருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த பொலிஸ், நிலையப் பொறுப்பதிகாரியைக் கைது செய்துள்ளனர்.
காணிப் பிரச்சினை தொடர்பாக 5 லட்சம் ரூபாய் இலஞ்சத்தினைப் பெற்ற வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக
வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply