, ,

மன்னார் தீவு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது -அருட்பணி மார்க்கஸ் அடிகளார் (video)

Spread the love
மன்னார் தீவு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது, மக்கள் இதற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க கூடாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி எஸ். மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (21.05) புதன்கிழமை காலை,மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்த அவர், மன்னார் தீவானது வேகமாக அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு வருகிறது.அதற்கு அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல தொழில் நிறுவனங்களும் முன் நின்று செயற்பட்டு வருகின்றன. மக்களின் எவ்வித அனுமதியும் இன்றி கனியமண்ணகழ்வு நடவடிக்கை மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகிறது. குறித்த நடவடிக்கைகளுக்காக மக்களினுடைய காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதனையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் செயற்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால் மக்களினுடைய வாழ்வாதாரமும்,எதிர்காலமும் பாதிக்கப்படும் என சூழலியலாளர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மக்களின் எதிர்கால பிரச்சனைகளை உள்வாங்காமல்,அரச திணைக்களங்களின் ஆதரவுடன் பல நிறுவனங்கள் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகிறன. மக்களை அழிவிலிருந்து காப்பாற்றாது,இலாபத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படும் பல்தேசிய நிறுவனங்கள் மக்களின் வாழ்விடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன. இரண்டு கணிய மண்ணகழ்வு நிறுவனங்களும்,மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களும், மன்னார் மக்களுக்கு எதிராக மிக வேகமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. குறித்த நிறுவனங்கள், ஏழை மக்களை ஏமாற்றி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தாம் கை கொடுப்பதாகக் கூறி மக்களை இத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கச் செய்யும் வகையில் செயற்பட்டு வருகின்றன. அத்துடன், மக்களின் காணிகளை அதிக பணம் கொடுத்து வாங்கி, தமக்கு சொந்தமாக்கிக் கொண்டு வாழ்விடங்களை பறிக்கும் ஒரு நிலையையும் ஏற்படுத்தி வருகின்றன. எனவே மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றினைந்து இந்த நிறுவனங்களுடைய திட்டங்களை எதிர்க்க வேண்டும். குறிப்பாக இத்திட்டங்கள் மூலம் அதிகம் பாதிக்கப்படப்  போகும் மீனவ சமூகம் இதற்கு எதிராகப் போராட முன் வர வேண்டும்.மேலும், குறித்த திட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதியை வழங்கக் கூடாது என மக்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

You cannot copy content of this page