,

தம்பி மீது அண்ணன் சரமாரியாக வாள் வெட்டு

Spread the love

பதுளை நகரப் பகுதியில் இன்று (20.05) சரமாரியாக வாள்வெட்டுக்கு இலக்காகிய நபர் ஒருவர் பதுளை மாகாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், சொந்த சகோதரனே தனது தம்பியை வாளால் வெட்டியதில் உடல் முழுவதும் பல வெட்டு காயங்களுடன் குறித்த நபர் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த வரைக் காப்பாற்ற முயன்ற மக்களை சந்தேகநபரான அண்ணன் கூச்சலிட்டு அச்சுறுத்தியுள்ளதால் மக்கள் அவரை நெருங்க இவர்களை நெருங்க பயந்த நிலையில்,

பதுளை பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ,பொலிஸ் வாகன சாரதி இணைந்து சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக, பதுளை  மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page