,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலகம் விளைவிக்க முயற்சி, வெள்ளவத்தையில் சம்பவம்

Spread the love

இன்றைய தினம் (18.05) ஞாயிற்றுக்கிழமை, கொழும்பு வெள்ளவத்தையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் விளைவிக்க குழுவொன்றினால்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற பகுதி முழுவதும் காலை முதலே கடும் பொலிஸ் பாதுகாப்பு அமுலில் இருந்த நிலையிலும் சிங்கள ராவய எனும் குழுவினர் அந்த இடத்திற்கு வந்து நினைவேந்தலுக்குச் சென்றவர்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்த குழுவினர், நினைவேந்தல் நடைபெறும் பகுதிக்குச் செல்ல முற்பட்ட வேளை, பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் அவர்கள் பொலிஸாருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நிகழ்வில் பங்கேற்றவர்களை நோக்கி கோசங்களும் எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

“இலங்கை இராணுவம் பயங்கரவாதிகளை எதிர்த்து மட்டுமே போரிட்டது”, “இவர்கள் நினைவேந்தலில் பங்கேற்பது வெட்கமானது”, “இவர்கள் கள்ளப்புலிகள்” எனப் பலமுறை கோசங்களை எழுப்பியதோடு

நிகழ்வு முடிந்த பின்னரும் நினைவேந்தலில் பங்கேற்றவர்கள் அங்கிருந்து வெளியேறும் வேளையில், அவர்களை நோக்கி “கொட்டியா”, “டயஸ்போரா” எனக் கோசமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page