தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்(18.05) ஞாயிறு காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில், கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழீழ உறவுகளை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்
மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரெலோ கட்சியின்,மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுக்கழக பிரதிநிதிகள், ரெலோ உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

















Leave a Reply