மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17.05) சனிக்கிழமை இரவு அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களினால் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவர்கள் அச்சங்குளம் கிராம சேவையாளரூடாகப் பொலிசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து முருங்கன் பொலிசார் மற்றும் அச்சங்குளம் கடற்படையினர் குறித்த உடலை பார்வையிட்டனர்.
குறித்த ஆணின் சடலம் முற்றிலும் சிதைவடைந்துள்ள நிலையில், ஆடைகளை வைத்து குறித்த ஆண் 30 வயதுக்கு மேல் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சடலம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.












Leave a Reply