தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இன்றைய தினம்(18.05) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் மன்னார் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றி மே 18 முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிரணித் தலைவி லூக் சோபனா அலெக்சாண்டர், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் துரைராசா ஜோன்சன்,
மன்னார் கலையருவி இயக்குனர் அருட்பணி லக்ஸ்டன் அடிகளார், அருட்பணி அருட்பிரகாசம் அடிகளார், செல்வ நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய குருக்கள் பாபு சர்மா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இறந்த உறவுகளுக்கு இதய பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.




















Leave a Reply