,

வாகன இலக்கத் தகடுகள் வழங்கல் தற்காலிக இடைநிறுத்தம்

Spread the love

புதிய மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இலக்கத் தகடுகள் பற்றாக்குறை காரணமாக, கடந்த ஏப்ரல் 28ஆம் திகதியிலிருந்து இலக்கத் தகடு வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.

வாகனப் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள் வழங்கப்படாவிட்டாலும், உரிமையாளர்களுக்கு வாகன இலக்கங்கள் வழங்கப்படுவதாகவும், அவற்றை பிரதி செய்து வாகனத்தில் வெளிப்படுமாறு காட்சிப்படுத்த முடியும் எனவும் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page