,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு மன்னாரில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி (Video)

Spread the love

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மன்னார் பேருந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் இன்று (15.05) காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு கஞ்சியினை அருந்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தனர்.  

You cannot copy content of this page