,

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்

Spread the love

பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக தொல்லைகள் இடம்பெற்றால் அது தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் எனவும் மாணவர்கள் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பில் தயக்கமின்றி முறைப்பாடு செய்யமுடியும் எனவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, பாடசாலைகளில் இடம்பெறும், பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ncpa@childprotection.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடு செய்யலாமெனவும்,
அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு சென்றும் முறைப்பாடுகளை அளிக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page