முள்ளிவாய்க்கால், படுகொலையைச் சித்தரிக்கும் வகையில்,யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் (14.05) ஊர்தி பவனி ஆரம்பமாகியுள்ளது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்தி பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளது.
“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் கட்டப்பட்டு நினைவுத்தூபியும் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பவனிக்கு, வீதிகளில் பயணித்த பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.










Leave a Reply