கொழும்பு கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை (National Child Protection Authority) தனி விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் திருமதி பிரீத்தி இனோகா ரணசிங்க,
மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 10 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ப்ரீத்தி இனோக்கா ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமி ஒருவர், பாடசாலை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.
இந்நிலையில் குறித்த மாணவிக்கு தனியார் வகுப்பிலும் ஏற்படுத்தப்பட்ட மன உளைச்சலைத் தொடர்ந்து, மாணவி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதிகோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையும், பாராளு மன்றத்தில் மாணவிக்கு நீதிகோரி விவாதங்கள் இடம்பெற்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.










Leave a Reply