நீர்கொழும்பு – வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம்(13) குறித்த இளைஞர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரையும் மீட்பதற்கு வென்னப்புவ பொலிஸார்,மற்றும் கடற்படையினர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்ட போதும் நால்வரும் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.
உதயகுமார் ஸ்ரீதரன் வயது 17, ஸ்ரீகாந்த் சரண் ராஜ்,வயது 19 ஸ்ரீகாந்த் அஜித் குமார் வயது 18 மற்றும் யூசுப் வயது 27 ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில், ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில்,
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்










Leave a Reply