,

வெளிநாட்டுப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிட்ட வாகன சாரதி கைது

Spread the love

இலங்கையில் வெளிநாட்டுப் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்து பல லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட
வாடகை வேன் சாரதி ஒருவர் எல்ல பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (13.05) கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அல்ஜீரிய பெண் ஒருவர் நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கிச் சுற்றுலா செல்வதற்காக வாடகை வேன் ஒன்றை ஒன்லைன் ஊடாக முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், வாடகை வேனில் நுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் போது.

வாடகை வேன் சாரதியினால் வழங்கப்பட்ட குளிர்பானத்தை அருந்திய நிலையில் மயக்கமடைந்துள்ளார்

இந்நிலையில், வாடகை வேன் சாரதி அல்ஜீரிய பெண்ணிடமிருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி, அந்த பெண்ணை ராவணா எல்ல அருகே உள்ள 30 அடி ஆழமுடைய பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளார்.

மயக்கத்திலிருந்த எழுந்த அல்ஜீரிய பெண் காயங்களுடன் எல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு அளித்த நிலையில் பொலிஸார் அப்பெண்ணை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான வாடகை வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வாடகை வேன் சாரதி. நுவரெலியாவில் வசிக்கும் 70 வயதுடைய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் எல்ல பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page