நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு விளக்குகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் நேற்றைய தினம் (12.05) திங்கட்கிழமை இவ்வாறு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பங்கேற்றவர்கள் மலர் தூவி விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கொத்மலை, ரம்பொட கரண்டி எல்ல பகுதியில் (11.05) இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த சுமார் 40 பேர் நுவரெலியா, நாவலப்பிட்டி மற்றும் கம்பளை வைத்தியசாலைகளிலும், பேராதனை மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பேருந்தின் நடத்துனர் கம்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே குறித்த பேருந்து விபத்துக்கு காரணம் என நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார, ஆரம்ப விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த விபத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு எதுவும் காரணமல்ல எனவும் பேருந்தில் இருந்த இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமானோர் பேருந்தில் நின்று கொண்டு பயணித்தமையாலேயே , பேருந்து விபத்துக்குள்ளான போது ஏராளமானோர் உயிரிழந்து மற்றும் பலர் காயமடைந்தனர்.
அத்துடன் பேருந்து பொறுப்பற்ற முறையில் இயக்கப்படுகிறதா என்பதை கண்டறிய, வீதியில் பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும்
இதன்போது பேருந்தின் ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் பேருந்தைச் செலுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.











Leave a Reply