, ,

பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடு தீவு மாணவி வித்தியாவின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள்

Spread the love

யாழ்- புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி  வித்தியாவின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைக்  கண்டித்து

யாழ் பிரதான பேருந்து நிலையம் முன்பாக இன்று (13.05)  செவ்வாய்க்கிழமை,காலை  இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு  போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

“பாலியல் தொல்லையற்ற வேலைத்தளங்களை உறுதிப்படுத்துவோம்”

“அரசே அம்சிகாவிற்கு நீதியை பெற்றுக்கொடு”

“பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு இடமில்லை”.

“சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துங்கள்”

“வாக்கு சேகரிப்புக்கு திரள்பவர்கள் சமூக நீதிக்கு ஒதுங்குவது ஏன்”

“எமது நாட்டின் பண்பாடா பாலியல் வன்கொடுமை?”

போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் இவ்வாறான பாலியல்   வன்கொடுமைகள் தொடர்வதைத் தடுக்க, சட்டமன்ற, நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறைகளில் உள்ள பொறுப்பான நபர்கள் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page