,

கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்ட பிரதமர்

Spread the love

கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களைப் பிரதமர் ஹரிணி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேற்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை இரவு, பிரதமர் கலாநிதி  ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன்,

விபத்தில் காயமடைந்தவர்களின் நலம் விசாரித்ததோடு, வைத்தியசாலையில் காயமடைந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.இதன் போது பெருந்தெருக்கள் போக்குவரத்து, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் சென்றிருந்தார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

இது போன்ற வாகன விபத்துக்களால் ஒவ்வொரு வருடமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன
இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்பது எமக்கு தெரியும். இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சரினால் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page