, ,

ரம்போடை பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு, உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு தீர்மானம்

Spread the love

ரம்போடை  கரண்டி எல்ல பகுதியில் இன்று (11.05) காலை சம்பவித்த பேருந்து விபத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த குறித்த பேருந்தில் 78ற்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அதில் தற்போது வரை 21பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையோர்  படுகாயங்களுக்கு உள்ளான நிலையில்  நுவரெலியா, கம்பளை மற்றும் நாவலப்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,

உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page