கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி இராமநாதன் கல்லூரி ஆசிரியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக
பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில்,
உயிரிழந்த மாணவி,கடந்த டிசம்பர் மாதம் பாதிப்புக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு அவருக்கு வெளிநாடு செல்ல தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த மாதம் 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
மாணவி கல்வி கற்ற தனியார் வகுப்பொன்றின் உரிமையாளரான சிவானந்தராஜா, மாணவியைப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியமையே அவர் தவறான முடிவெடுத்தமைக்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் சிவானந்தராஜா, நேற்றையதினம்(09) தனக்கும் மாணவியின் மரணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










Leave a Reply