கொட்டாஞ்சேனையில் தவறாக முடிவெடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய ஆசிரியரைப் பாதுக்காக நினைக்கும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உடனடியாக அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அவர்,
ஆசிரியரைப் பாதுகாக்க நினைக்கும் சரோஜா போல்ராஜ், இந்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு பொருத்தமற்றவர் எனவும், உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில்,ஒரு பெண்ணாக, தாயாக, ஆசிரியராக, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரோஜா போல்ராஜ் பொறுப்பின்றி செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான சரோஜா சாவித்திரி போல் ராஜ், அமைச்சர் என்ற பொறுப்பிற்கும், அரசாங்கம் என்ற பொறுப்பிற்கும் அப்பால் செயற்படுகின்றார் எனவும் துன்புறுத்தலுக்கு உள்ளான குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என அமைச்சர் கூறியுள்ளதாகவும் அவர் இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பதற்காக இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறுகின்றாரா? என்று கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன,
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்புவதற்காக முயற்சித்த போது சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினர் எவரும் தனக்கு கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்










Leave a Reply