கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சிறுமி தொடர்பில், சமூக வளைதளங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரான சிவானந்த ராஜா,குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னை பற்றியும் தனது அரசியல் மற்றும் தொழில் பற்றியும் போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் அது தொடர்பில் முறைபாடு பதிவு செய்ய நேற்றைய தினம் (09) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகைத்தந்துள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும்,சிறுமி உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக் கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் , மாணவி உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகிக்கப்படும் அரச பாடசாலையின் ஆசிரியர் ஒருவருவரும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நேற்று (09) மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் ‘பி’ அறிக்கை தமது அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை, நிறுவன விதிக்கோவையின் பகுதி II, அத்தியாயம் XLVIII இன் பிரிவு 27:9 இன் படி கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் சில தரப்பினர் தமது பணிப் பொறுப்புகளை புறக்கணித்திருக்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக அமைச்சினால் உள்ளக விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply