பாலியல் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் திவி நெமுக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு, 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெண்னொருவர் தனது ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடம் பண உதவி கோருவதற்கான அனுமதியை பெறுவதற்காக குறித்த உத்தியோகத்தரின் உதவியை நாடிச் சென்றிருந்த வேளை அப்பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரி,
திஸ்ஸ மகாராமையில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற வேளை,இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால்,குறித்த உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லஞ்சம் கோரிய உத்தியோகத்தருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்,20000 தண்டப் பணமும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
அத்துடன் குற்றவாளியின் வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதனைத் தேர்தல் ஆணையாளருக்கும் அறியத் தருமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.










Leave a Reply