,

பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ராமநாதன் அர்ச்சுனா

Spread the love

பாராளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமையால் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்றையதினம்(08.05) வியாழக்கிழமை, பாராளுமன்றத்தில்  விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அர்ச்சுனா, பலமுறை உறுப்பினர்களை இடைமறித்துப்  பேசியுள்ளார்.

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பான விவாதம் நடைபெற்ற போது அவர்  சபையை பலமுறை  இடைமறித்துள்ளார்.

இதன் காரணமாகவே அவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,  பாராளுமன்றத்தில்    அர்ச்சுனா உரையாற்றுவதை ஒளிபரப்புவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தமை  சுட்டிக்காட்டத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page