,

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது -மன்னார் அரச அதிபர்

Spread the love
மன்னார் மாவட்டத்திலேயே உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்குரிய   அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்து முடிக்கப்பட்டி ருக்கிறது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (05.05) மாலை  மன்னர் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார்  மாவட்டத்திலே 91, 373 வாக்காளர்கள் இம்முறை 88 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்க உள்ளார்கள். மன்னார் நகர சபையில் 18 பேரும் மன்னார் பிரதேச சபையில் 23 பேரும், நாநாட்டான் பிரதேச சபையில், 19 பேரும் முசலி பிரதேச சபையில்,19  பேரும் மாந்தை மேற்கு பிரதேச சபையில், 24 உறுப்பினர்களும் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேச்சை குழு சார்பாக போட்டியிடவுள்ளார்கள். இவர்களிலிருந்து மன்னார் நகர சபைக்கு 15 பேரும், மன்னார் பிரதேச சபைக்கு 20 பேரும், நானாட்டான் பிரதேச சபைக்கு 16 பேரும், முசலி பிரதேச சபைக்கு 16 பேரும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 பேருமாக 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள். அந்த வகையில் 114 வாக்களிப்பு நிலையங்களிலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

மாவட்டச் செயலகத்திலிருந்து வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்களிப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இன்றைய தினம் அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதேபோன்று வாக்களிப்பு நிலையங்கள் மற்றும்  வாக்கெண்ணும் நிலையங்களிலே   உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. எனவே நாளைய தினம்  மக்கள் நேரத்துடன் சென்று காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தங்களது பெறுமதியான வாக்குகளைச் செலுத்தும் படி அன்பாக கேட்டுக் கொள்கிறோம். “என்றார்.

You cannot copy content of this page