யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (02.5) வெள்ளிக்கிழமை பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் வைத்துப் பதில் பொலிஸ் மா அதிபரால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த தங்கம் மற்றும் வெள்ளி என்பன நீதிமன்ற உத்தரவின்படி, இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையூடாக மதிப்பிடப்பட்டு, இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது.
அதேசமயம் அடையாளப்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படும் ஆபரணங்களை பொதுமக்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









