கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட நகரில் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வந்த காணொளி மூலமே குறித்த நபர்கள் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்
பெண்ணொருவர் தொடர்பில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.










Leave a Reply