சீன பொருட்களுக்கு
இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245% ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதனால் அதற்கு பதிலடியாக அந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஏவுகணை தயாரிப்பு, மற்றும் மின்சார காருக்கு பயன்படுத்தும் அரிய உலோகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்தது.
உலோகத்துக்கு சீனா விதித்துள்ள இந்த தடையினால், அமெரிக்காவின் பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி என அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் சீன பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் 245% வரி விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த வர்த்தகப் போர், மற்ற நாடுகளையும் பதட்டம் அடைய செய்துள்ளது.
மேலும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான இந்த வர்த்தகப் போர் உலகளாவிய பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.










Leave a Reply