விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்திக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உதய கம்மன்பில பிள்ளையானின் வழக்கறிஞராகச் செயற்பட்டு வருகின்றமையாலேயே அவரைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காகப் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.










Leave a Reply