இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியனின் பாராளுமன்ற உரையில்,
பிரயோகிக்கப்பட்டுள்ள சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம்(09.04) புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள் மாகாண சபை தேர்தல், மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான கேள்விகளை ராஜமாணிக்கம் சாணக்கியன் பிரதமரிடம் முன் வைத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,
ராஜமாணிக்கம் சாணக்கியன் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்கள், மற்றும் மொழிநடை என்பன சபைக்குப் பொருத்தமற்றதாகக் காணப்பட்டதாகவும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனிமேல் இடமளிக்க வேண்டாம் எனவும் சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, பிரதம கொறடாவான அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ, இதனைச் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்று முறையான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என சபைக்கு தலைமை தாங்கியிருந்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் வலியுறுத்தியுள்ளார்.










Leave a Reply