குருநாகல், வெஹராவில் உள்ள சமையல் எரிவாயு நிலையம் ஒன்றில் நேற்றிரவு (7.04) திங்கட்கிழமை கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில், மேலும் நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நான்கு பேரின் சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவில் உள்ளதாகத் தெரிய வருகிறது.
குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










Leave a Reply