, ,

நாட்டு மக்களின் பொதுப் போக்குவரத்தை இலகுவாக்க அரசின் புதிய திட்டம்

Spread the love

நாட்டு மக்கள் பயணங்களை மேற்கொள்வதில் முகம் கொடுத்து வரும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்  தொடர்பில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து சரக்கு இரயில் போக்குவரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்துகள், ஒரே பேருந்து நிலையத்திலிருந்து ஒரே நேர அட்டவணையைப் பின்பற்றிச் சேவையில் ஈடுபட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளது.

இருப்பினும், சில பகுதிகளில் இந்த இரண்டு வகை பேருந்துகளுக்கும் வெவ்வேறு பகுதிகளில் பேருந்து நிலையங்கள் அமைந்திருப்பதால் பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதில் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையினைக் கருத்திற் கொண்டு தனியார், மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டுத் திட்டமொன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளோம் ” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page