மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு நேற்றைய தினம் (5.06) வியாழக்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
அது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள சில தீர்மானங்கள் பற்றி,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு இன்றைய தினம் (5.06) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது ஏற்கனவே அழைக்கப்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருந்த நிலையில், மன்னார் நீதிமன்ற நீதவான் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனத்தினா் ஆகியோா் குறித்த சதொச மனித புதைகுழி பகுதியை இன்றைய தினம் வியாழக்கிழமை (5) காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டு. சில தீர்மானங்களை மேற்கொண்டனர்.
குறித்த புதைகுழி பிரதேசத்தை சுத்தப்படுத்தி,நிறம்பியுள்ள நீரை நகர சபையின் உதவியுடன், வெளியேற்றி குறித்த புதைகுழியை பகுதி அளவில் மூடுவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது ஏற்கனவே எடுக்கப்பட்ட மண் சதோச நிறுவனத்திடம்
உள்ளதா ?,அது எங்கே இருக்கிறது என்பதனை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில்,இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி (12-06-) வியாழக்கிழமை ழமேலதிக நடவடிக்கைக்காக அழைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்










Leave a Reply