யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாராசுவாமி வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷாந்தி கொலை வழக்கில்,மரண தண்டனை கைதிகளாக உள்ள ஐவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இன்று ஏகமனதாக நிராகரித்துள்ளதுடன் மேல்முறையீடு செய்வதற்கும் அனுமதி மறுத்துள்ளது.
குறித்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்ச உட்பட தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவரினால் தாங்கள் பல வருடங்களாக மரணதண்டனை கைதிகளாக உள்ளதாகத் தெரிவித்து குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவில், தங்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றாமல், பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் அல்லது தங்களிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
1996 செப்டம்பர் 7 அன்று மாணவி கிருசாந்தி குமாராசுவாமி , இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.










Leave a Reply