வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று (26.05) திங்கட்கிழமை அதிகாலை இடம் பெற்ற கோர விபத்தில் இந்தியத் துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் (பிரபாகர சர்மா) சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
வட இந்தியாவின் இமயமலைச் சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று நாடு திரும்பிய அவர் காரில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே ஓமந்தை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.











Leave a Reply