,

தானே செலுத்தி வந்த லொறியில் சிக்கி சாரதி பலி

Spread the love

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல பகுதியில், நேற்று (26.05) இரவு 7.30  மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 33 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வெதமுல்லையில் இருந்து  கெமிலிதன் பிரதேசத்திற்கு மரக்கறி ஏற்றுவதற்காகப் பயணித்த லொறியை வழியில் நிறுத்தி விட்டு இறங்கிய லொறியின் சாரதி, லொறி டயருக்கு கல் ஒன்றை வைக்க முற்பட்ட போது குறித்த லொறி தானாக நகர்ந்து சாரதி மீது ஏறிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
 
லொறியல் சிக்குண்ட குறித்த சாரதி அப் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு அருகில் உள்ள தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பொழுது அவர்
உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொத்மலை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page