இந்த நாட்டின் அதிகாரம் சிங்கள பேரினவாதத்தின் கையில் உள்ளதால் அவர்களுக்கு எது நீதியோ அவர்களுக்கு யார் தலைவனோ அவர்களை மட்டும் தான் கொண்டாட முடியும் என்று சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் கவலை வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“நாங்கள் எப்பொழுது நினைவேந்தலை முன்னெடுத்தாலும் சில இனவாதிகள் வந்து அதனை குழப்புகின்றனர்.
இந்தவருடமும் அவ்வாறே இடம்பெற்றது.
ஒருமுறை பொரளை பொதுமயனத்தினருகே நினைவேந்தலில் ஈடுபட்ட பொழுது அண்மையில் உயிரிழந்த டேன் பிரியசாத் அங்கு வந்து நினைவேந்தலில் குழப்பம் விளைவித்தார்.
தற்போது அவருக்கே நினைவேந்தல் செய்ய வேண்டிய நிலை உள்ளது, எனினும் அவரின் மரணத்திற்கு நீதி கேட்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.










Leave a Reply